Find us on Google+ இணையத் தமிழன்
Loading...

Monday 18 March 2013

இந்தியத் தமிழனாக....

லங்கையின் போர் குற்றங்களுக்கும், தமிழ் இன படுகொலைகளுக்கும் எதிராக, தமிழக மாணவர்களின் எழுச்சி மிகு போராட்டம் , தமிழகம் முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் கவனிக்கப்படவேண்டியவை ..

இந்த மாணவர்களின் போராட்ட உணர்விற்கு தலை வணங்குகிறேன் . இந்த போராட்டம் எந்த அரசியல் தலைவர்களாலும் தூண்டி விடப்பட்டதல்ல . அடி ஆழத்திலிருந்து வீரிட்டு எழும் ஆற்றாமையின் வெளிப்பாடு . மனசாட்சி உள்ள யாரும் இதை கொச்சை படுத்த வேண்டாம் ..

அதே சமயம், இந்த போராட்டங்கள் முறைப்படுத்தபடாமல், தகுந்த தலைமை இல்லாமல் , செல்வது மாணவர்களின் வருங்காலத்திற்கு ஆபத்தானது . தமிழக அரசோ, காவல்துறையோ இந்த போராட்டத்தை அடக்கவே செய்யுமே ஒழிய , ஊக்குவிக்காது .

இந்திய அரசும் , இந்த போராட்டங்களுக்கு பணியாது . இலங்கை போரை , முன்னின்று நடத்தியது "இந்தியாவே", இது மறுக்க முடியாத உண்மை . இன அழிப்புக்கு துணை போன அமெரிக்கா வோ , நீர்த்துப் போன ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நாடகம் ஆடுகிறது . போரை முன்னின்று நடத்திய இந்திய அரசோ, அதற்க்கு எல்லா வகையிலும் உறுதுணையாய் இருந்த தமிழ் அரசியல் கட்சிகளோ , இதில் அரசியல் ஆதாயம் தேடவே முயல்கின்றது .

இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்தை , கொண்டு வரவேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு இருந்தாலும் , சற்றும் வலுவில்லாத இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை இதை கொண்டு வராது . 

தயவு செய்து மாணவர்கள் இதனை உணர்ந்து , தமிழக அரசியல் கட்சிகளின் வலையில் வீழாமல் இருப்பது முக்கியம் . தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு ஆதரவும் இருக்கப்போவதில்லை என்பதையும் உணர்ந்து, தங்கள் படிப்பையும் , எதிர் காலத்தையும் , கருத்தில் கொண்டு இந்த போராட்டங்களை கைவிட வேண்டும்.  

தமிழக அரசு செய்யவேண்டியது , இந்திய தமிழ்  மீனவர்களுக்கு எதிராக , சர்வாதிகார போக்குடன் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று , இந்திய அரசுக்கு கடுமையாக நிர்பந்திக்க வேண்டும் . இனி எந்த ஒரு இந்திய தமிழ் மீனவனும் , இலங்கை கடற்படையினால் , தாக்கப்படக் கூடாது . இதனை வெகு தீவிரமாக தமிழக அரசு , மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் .

இந்திய அரசு , தமிழ் மீனவர்களுக்கு பாதுகாவலாக , இந்தியக் கடலோர காவல்  படையை , மீனவர்களுடன் அனுப்ப வேண்டும் .

கேரளா மீனவர்களைக் கொன்ற இத்தாலிய வீரர்களை ,நாடு கடத்த உதவிய , இத்தாலிய தூதரிடம் , காட்டும் கடுமையை..., இந்திய மீனவர்களை தாக்கி, கொல்லும் , இலங்கை மீது இந்திய அரசாங்கம் ஏன் கடுமை காட்டவில்லை ??

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றதா ? என்ற கேள்வியை எழுப்ப நான் விரும்பவில்லை ....

இந்தியத் தமிழர்களை காப்பாற்ற தவறினால், இந்திய கூட்டமைப்பு , கேலிக்குரியதாகிவிடும் .




Thursday 6 December 2012

மாற்றங்கள் மலரட்டும்

இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன் : 

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.





இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

                                 

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.

உதயகுமாரின் அலைபேசி எண்: 9940734277

உதயக்குமார் போன்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய உண்மையான திறனாளிகளை வாழ்த்துவோம்

தோல்வியடைய 10 வழிகள் :


நாணயம் விகடன் இதழிலிருந்து ..


'பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’ 
கோகோ-கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய புத்தகம்.இவற்றை பின்தொடர்ந்தால் தோல்வி நிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.


1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.

2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்.

3. மேனேஜரோ/சிஇஓ-வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.

4. நான் தவறே செய்ய மாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.

5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
                                        
                                         

6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.

7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.

8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.

9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.

10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல் படுங்கள்.

பொன் போன்ற இந்த விதிகளை ஞாபகம் வைத்து , இவற்றை தவிர்த்து வாழ்விலும்,தொழிலிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் .

சமீப பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...