Find us on Google+ இணையத் தமிழன்: November 2012

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Monday, November 12, 2012

தீப ஒளித் திருநாள்

தீபஒளித் திருநாள் :

தீபங்களின் திருநாளாம் தீபாவளி, இந்துக்களின் முக்கியப் பண்டிகை, இது இந்தியாவில் மிக அதிகமாகவும் , பரவலாகவும் கொண்டாடப்படுகிறது .

வட இந்தியாவில் இதை வனவாசத்திலிருந்து ராமர் திரும்பிய நாளாக கொண்டாடுகிறார்கள் .

தென் இந்தியாவில், இதை நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாக கொண்டாடுகிறார்கள் .

மலேசியாவில் இதனை "ஹரி திவாளி " என அழைக்கின்றனர்.

நேபாளத்தில் , தீபாவளி திஹார் (அ) ஸ்வண்டி என கொண்டாடப்படுகிறது . இன்று மரணத்தின் கடவுளான "யமனை" வழிபட்டால் நீண்ட ஆயுளை பெற முடியும் என நம்புகின்றனர்.

வங்காளத்தில் இது காளியின் பண்டிகையாக "காளி பூஜையாக" கொண்டாடப்படுகிறது.

ஒதிஷாவில் இந்நாளில் , இறந்தவர் ஆன்மாக்கள் சொர்க்கம் சேர வழிகாட்டும் விதமாக சணல் கீற்றுக்களை எரிப்பர்.

சீக்கியர்களுக்கு தீபாவளி ஒரு முக்கிய தினமாகும் . சீக்கியர்களின் புனித கோவிலான "பொற்கோவில்" கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது 1577 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் தான்.

மகாவீரர் நிர்வாணம் (அ)  மோட்சம் அடைந்தது தீபாவளி நாளில்தான் , அதனால் இந்தியாவிலுள்ள சமண மதத்தை சேர்ந்தவர்கள் இந்நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் .


அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !!!




   

Saturday, November 10, 2012

பசுமை 500 - அசத்தும் இந்திய நிறுவனங்கள்


நியூஸ் வீக்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளிவரும் சர்வதேச வார இதழ் நியூஸ் வீக் . கடந்த 2010 ஆம் ஆண்டு "தி டெய்லி பீஸ்ட்" என்னும் இணைய இதழுடன் இணைந்தது. வரும் டிசம்பர் 2012 முதல் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொள்ளப்போகும்  நியூஸ் வீக் இதழ் இனி இணைய இதழாக மட்டுமே வெளிவரும் .

பசுமை நிறுவனங்கள் தரவரிசை :

நியூஸ் வீக் சஞ்சிகை , நியூஸ் வீக் பசுமை தரவரிசை" என்னும் பெயரில் அமெரிக்காவிலும் , உலக அளவிலும் , சுற்றுப்புற சூழலை பேணிக்காக்கும் சிறந்த 500 நிறுவனங்களின் தரவரிசையை  வெளியிடுகின்றது.

2012 பசுமை தரவரிசை:
இந்த ஆண்டு வெளியிட்ட தர வரிசையில் , உலக அளவில், 2 ஆம் இடம் பெற்றுள்ளது  இந்தியாவின் விப்ரோ நிறுவனம்.  அது மட்டும் அல்ல முதல் 20 இடங்களில் இந்தியாவின் 3 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் , இடம்பெற்று அசத்தியுள்ளது . 11 ஆம் இடத்தில டாடா கன்சல்டன்சி சர்வீ சஸ் -ம் , 19 ஆம் இடத்தை இன்போசிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது .

இவை தவிர மேலும் 10 இந்திய நிறுவனங்கள் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளது . அவை ...

நிறுவனம்                                                       தரவரிசை                                                          
லார்சென் & டூப்ரோ                                         96
டாட்டா மோட்டர்ஸ்                                       282
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்                      342
பாரத ஸ்டேட் வங்கி                                       344
ஹச்.டி.எப்.சி  வங்கி                                        346
ஓ.என் .ஜி.சி                                                     386
டாட்டா ஸ்டீல்                                                  419
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி                                              476
என்.டி.பி.சி                                                        497
கோல் இந்தியா                                                  499


நியூஸ் வீக் பசுமை தரவரிசை பட்டியலை இங்கே முழுமையாக காணலாம் :

எண்ணிக்கை அளவில்  குறைவாக இருந்தாலும் , முதல் 20 இடங்களில் 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பது சாதனை தானே ?! அதிலும் இந்த நிறுவனங்கள் தங்கள் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதோடு  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிலும் ஈடுபடுவது கூடுதல் சிறப்பு . எனவே இதை மனமார பாராட்டுவோம் .

பசுமையை காப்பதில் அனைவரும் பங்கெடுப்போம் .


Monday, November 5, 2012

காணாமல் போன பேனாக்கள்


எழுத்தின் வீரியத்தை விவரிக்க , கீழ்க்கண்ட சொல்லாடல் ஒரு உதாரணம் ...

"கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது"

என் சிறு வயதில் பேனா பிடித்து எழுதுவதும் எனக்கு பெரிய சாதனை தான் .
மழலை வகுப்புகளில் , பென்சிலை மட்டுமே கையாள முடியும் .
பேனாக்கள் எல்லாம் பெரிய வகுப்பிற்கு சென்றால் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் .






நடுநிலை வகுப்புகளில் , நீலம் அல்லது கருப்பு மை ஊற்றி எழுதும் குண்டு பேனா அறிமுகம் . கைக்கும் சரியாக அடங்காமல் , கையெழுத்தும் சரியாக அமையாமல் , கையிலும் சட்டையிலும் மை அப்பிக்கொண்டு ... அப்பொழுதெல்லாம் "HERO" பேனாவின் மீது மையல் .

                       

ஆனால் ஹீரோ பேனாக்களோ , பெரிய வகுப்புகளுக்கு சென்றால் மட்டுமே , பெற்றோர்கள் வாங்கித் தருவார்கள் . எனவே எப்போது பத்தாம் , பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வருவோம் , பெரிய அண்ணாக்களைப்  போல  
ஹீரோ பேனாக்களை பயன்படுத்துவோம் என்ற ஆசை உண்டு .

                     

பள்ளி இறுதியில் படிக்கும் போதோ , கல்லூரி கனவுகள் வந்து தாலாட்டும் , எப்போது கல்லூரிக்கு செல்வோம் , ஒற்றை நோட்டு புத்தகத்தை முதுகில் சொருகிக்  கொண்டு , ஸ்டைல் ஆக விதவிதமான Ball Point பேனாக்களை உபயோகப்படுத்த முடியும் , என்று ஏக்கம் வருவதுண்டு .


                       

பின்னர் கல்லூரியில் பலவித பேனாக்களை பயன்படுத்திய போதும் ,  அதை அனுபவித்து பார்க்க நேரமோ மனமோ , இல்லாமல் போய் விட்டது .







படிப்பை முடித்து , வேலை கிடைத்து , சில வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும் போது , எனக்கும் பேனாவுக்குமான இடைவெளி நீநீண்டிருந்தது















கடைசியாக எப்போது பேனாவை பயன்படுத்தினோம் என்ற நினைவே இல்லை . கடன் அட்டைகளுக்கு கையெழுத்து போடுவதை தவிர வேறெப்போதும் எனக்கு பேனா தேவைப்பட்டிருக்கவில்லை .
வலைப்பூ எழுதுவதற்கு கூட கணினியின் கீபோர்டே போதுமானதாகிவிட்டது .

                             


அனால் இப்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பார்க்கும் போதும் , அவர்கள் பேனா பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தும் போதும் , எதையோ இழந்த ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை .

Popular Posts