Find us on Google+ இணையத் தமிழன்: சிவசமுத்திரம் அருவி : ஒரு பயணக் கட்டுரை

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, April 6, 2012

சிவசமுத்திரம் அருவி : ஒரு பயணக் கட்டுரை




யணங்கள் எப்போதுமே இனிமையானது!!! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி !!!


ண்பன் ரங்கா , சென்னையில் வேறு ஒரு ஒரு நிறுவனத்திற்கு மாறுதலாகி செல்வதால் , அதற்கு முன் நண்பர்களோடு ஒரு சிற்றுலா செல்ல திட்டமிட்டோம் . முதலில் நந்தி மலைக்கு Bike Ride செல்வதாக திட்டமிட்டு , கடைசி நேரத்தில் சிவசமுத்திரம் அருவிக்கு செல்வதாக முடிவெடுத்தோம் .

சிவசமுத்திரம் அருவி - ஒரு முன்னோட்டம் :
  • சிவசமுத்திரா (அ) சிவனசமுத்திரா , கர்நாடக மாநிலத்தின் , சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது.பெங்களுரு விலிருந்து 139 கி.மீ தூரத்தில் இருக்கிறது .
  • சிவசமுத்திரம் அருவி , இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவி மற்றும் உலகின் பதினாறாவது பெரிய அருவி .
  • காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த அருவி,வீழும் இடத்தில் இரண்டாகப்பிரிந்து ககனசுக்கி, பரசுக்கி என இரு அருவியாக வீழ்கிறது.


எங்கள் பயணம் :

ழை ஆரம்பித்து வைத்த ஒரு சனிக்கிழமை அதிகாலை , எங்கள் பயணம் இனிதே ஆரம்பமானது .12 பேர் கொண்டது எங்கள் குழு . அதிகாலை 6 மணிக்கு , புறப்படுவதற்கு தயாரானோம் , ஆனால் வேன் வர தாமதமானதால் , 7 மணியளவில் கிளம்பினோம் .

                          


8.30 மணிக்கு , பெங்களுரு புறநகர் பகுதியை தாண்டியிருந்தோம் . "Wonder La" வுக்கு அருகிலுள்ள ஒரு சாலையோர உணவகத்தில் , காலை உணவை உண்டோம் .பெரிய சைஸ் "தட்டு" இட்லி , சுமார் தான் , ஆனாலும் புதுமை ...

செல்லும் வழியில் , கில்மா சாமிகள் "நித்தியானந்தா" புகழ்?! "பிடதி" நகரம்,
இந்தியாவின் மிகப்பெரிய பட்டு சந்தைகளில் ஒன்றான  "ராமநகரா" (பட்டு நகரம் என அழைக்கப்படுகின்றது ),
மற்றும் மரப்பாச்சி பொம்மைகளுக்கு பெயர் பெற்ற "சன்னபட்டனா " (Land Of Toys என அழைக்கப்படுகின்றது ) என்னும் சிறு நகரம் , ஆகிய ஊர்களின் வழியாக , எங்கள் வேன் சென்றது .

பாட்டும் , கூத்துமாக உற்சாகமாக பயணமானோம். 11 மணியளவில் சிவசமுத்திரா நகருக்கு அருகிலுள்ள ஆசியாவின் முதல் நீர்-மின் நிலையத்தை ( 1902 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது )அடைந்தோம்.
சிறிது நேர photo shoot ற்கு பிறகு , மீண்டும் தொடர்ந்தோம் .

                        

"கள்" எங்கு கிடைக்கும் என்று அடிக்கடி விசாரித்துக்கொண்டிருந்த நண்பன் ராமின் , எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற படி எங்கள் வேனின் டிரைவர் , ஒரு சிறிய கிராமத்தில் "கள்"  கிடைக்கும் ஒரு வீட்டிற்கு எங்களை கூட்டி சென்றார். அங்கே தாகத்திற்கு தென்னை பதநீர் அருந்திய பின்னர் , அருவியை நோக்கி விரைந்தது எங்கள் வேன் .


                         



                         


 ககனசுக்கி:


முதலில் நாங்கள் சென்றது ககனசுக்கி அருவி . நீரோட்டம் அதிகாமாக இல்லாததால் , பாறைகள் துருத்தி வறண்டு இருந்தது அருவி .. வெயிலும் நன்றாக அடித்ததால் , அங்கே அதிக நேரம் இருக்க முடியவில்லை .


                        


                        

பரசுக்கி :


பின்னர் நாங்கள் பரசுக்கி அருவிக்கு சென்றோம் . அருவியில் நீரோட்டம் நன்றாக இருந்தது . அருவிக் குளியல் மிகவும் அருமை . நேரம் போனதே தெரியவில்லை . அருவிக்கு செல்ல 326 படிகள் உள்ளன . நன்றாக பராமரித்தால் , இன்னும் நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள் . அருகில் உணவகங்கள் எதுவுமே இல்லை . பிற்பகல் 2 மணி வரை அருவியில் நீராடியபின் அருகிலுள்ள சிற்றூரில் மதிய உணவு சாப்பிட்டோம். 

                          


                          


                          


தலக்காடு :   


லக்காடு , வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிற்றூராகும்.இது 350-1050 கிபி வரை மேற்கு கங்கர்களின் தலைநகரமாக விளங்கியது. கிபி 11ம் நூற்றாண்டில் சோழர்கள் மேற்கு கங்கர்களை முறியடித்து தலக்காட்டை கைப்பற்றினர். இங்கு 30க்கும் அதிகமான கோயில்கள் இருந்தன. பின்னர் ஏற்ப்பட்ட ஒரு இயற்கை பேரழிவில் , அனைத்து கோயில்களும் மணலில் புதைந்து விட்டன . மணலில் இருந்து அகழ்ந்தெடுத்த சில கோயில்கள் காலத்தின் சுவடுகளை தாங்கி , இன்றும் மௌன சாட்சியாய் இருக்கின்றன . 

                           


                          

                          


                          


                          

கோயில்களை சுற்றிப்பார்த்த பின் , நேரமாகி விட்டதால் 6 மணியளவில் , தலக்காடு காவிரி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம் . காவிரி ஆறு , திருச்சி அருகில் இருப்பதை போலவே பரந்து இருக்கின்றது . 

                          



                          

                          

7 மணியளவில் அங்கிருந்து கிளம்பி , பெங்களுருவை நோக்கி பயணமானோம் . ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டமாக பெங்களுருக்கு வந்து சேர 10.30 மணி ஆகிவிட்டது .மிக நீண்ட நாட்களுக்கு பின் , இந்த அருவிப் பயணம் உடலுக்கும் , மனதுக்கும் நல்ல புத்துணர்ச்சியை தந்தது .. 

யணங்கள் எப்போதுமே இனிமையானவை தான் !!!

0 Comments
Tweets
Comments

Popular Posts