வணக்கம் மானுட நண்பர்களே !!!
என் பெயர் சிட்டு குருவி ...
( பி .கு சிட்டுக் குருவிகள் , எங்கும் கிடைக்கததால் கிளியின் படங்கள் :) )
காடுகளிலும் , கழனிகளிலும் , கரன்ட் கம்பங்களிலும்
என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள் !!!
காக்கை , குருவி எங்கள் ஜாதி - என்று
எமைப் பற்றி உவகையாய் பாடியுள்ளான் , புரட்சிக்கவி !!!
" சிட்டு குருவி முத்தம் கொடுத்து ..." - என்று
எனைப்பற்றி பாடி அன்பு வளர்த்தார்கள் !!!
"ஏய் குருவி , சிட்டுக்குருவி ...." - என்று
நடிகர் திலகமும் கூவி மகிழ்ந்தார் .
இப்படி ஏற்றமும் , போற்றமுமாக சுதந்திரமாய் ,
சிறகடித்து வானில் பறந்திருந்தேன் !!!
பொல்லாத மானிடர் பலர் , நித்தமும்
(வெட்டி ) பொல்லாப்புக் கதைகள் பேச
ஊரெல்லாம் வெட்டி எறிந்தார்கள் மரங்களை !!!
மனிதப் பதர்கள் , நட்டார்கள் செல்போன் டவர்களை !!!
அழித்தேவிட்டனர், வேரோடு எங்களை !!!
BLUE CROSS புதல்வர்களே !!!
என் இனத்தை , எனக்கு கண்டுபிடித்து தாருங்களேன் , ப்ளீஸ் ?!!!