Find us on Google+ இணையத் தமிழன்: மனிதம்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

Wednesday, June 13, 2012

#நான் தான் சார்லி


மதங்களின் பெயரால் கொல்லப்பட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

ம(னி)தம்

மனிதத்திலிருந்து உன்னை பிரித்தெடுப்பது மதம் .

கடவுளை வழிபட,உருவான மதம்
கடவுளை விட பெரியதாக , கொடியதாக வளர்வது ஏன் ?

அன்பு,கருணை,இரக்கம் ஆகியவற்றை போதிக்கவேண்டியது மதம்,
ஆனால் உலகத்திலுள்ள அனைத்து மதங்களின் பெயராலும் 
மனிதர்கள் கொல்லப்படுவது ஏன்?

மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படும்போது
கடவுளையே கொள்கிறோமே , தெரியவில்லையா?

காட்டு மிருகமாய் இருந்தவனை , சமூக மிருகமாக மற்ற உதவிய மதம்,
அவனை மறுபடி காட்டுமிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது என்ன நியாயம்?

என் மதம் பெரிது ,உன் மதம் பெரிது என்று அடித்துக் கொண்டு சாகிறோமே,
எது பெரிது ? மதமா? கடவுளா?





என் மதத்தை தவிர , வேறு மதத்தவரை அவர் காப்பாற்றமாட்டார் என்றால், அவர் எப்படி கடவுளாக முடியும் ?
அனைத்து மக்களுக்கும்/மாக்களுக்கும் பொதுவானவர் தானே அவர்?

என் கட்சிக்கு மட்டும் தான் சொர்க்கம், எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் நரகம் என்று தீர்ப்பளிக்க ,கடவுள் என்ன அரசியல்வாதியா?

சுற்றுச்சூழல் மாசடைதல், புவி சூடாதல், வணிகமயமாக்கல்,இயற்கை ஆதாரங்கள் அளிக்கப்படுதல் என்று நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் ஆயிரமாயிரம்.

இப்போதுள்ள காலகட்டத்திற்கு, உடனடி தேவை
மரம் வளர்ப்பது தானேயன்றி, மதம் வளர்ப்பதல்ல,

உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தவறிவிட்டதால்,
மதமும் , தீண்டாமையைப் போல் மனிதத்தன்மையற்றதே !

மனமே கோயில், மனிதமே தெய்வம்.
மதம் தொலைத்து ,மனம் மாறுவோம்..மனிதம் மீட்போம்..

Friday, December 24, 2010

இணையப் பிரியர்களுக்கு






இணையப் பிரியர்களே ..
             
        இணையம், இதயங்களை இணைப்பதர்கேயன்றி ,

        அவற்றை பிரிப்பதர்கன்று ..

        எனவே இணையத்தை அணைத்துவிட்டு 

        உங்களுக்காக ஏங்கும் 

        இதயங்களை அணைத்துக் கொள்ளுங்கள் ...


       வாழ்வை மனிதர்களோடும் , பகிர்ந்து கொள்ளுங்கள்.
      
       இணையத்தில் மூழ்கி , தனித் தீவுகளாக மாறுவதை , தவிர்ப்போம் .
   
       மனிதம்  வளர்ப்போம் ..

Popular Posts