Find us on Google+ இணையத் தமிழன்: தமிழக சட்டமன்ற தேர்தல் 2016 : முடிவுகள் எனது பார்வையில்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Thursday, May 19, 2016

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016 : முடிவுகள் எனது பார்வையில்

கடந்த 3 மாதங்களாக தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த , 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு வழியாக முடிந்து , இன்று முடிவுகளும் வெளியாகிவிட்டது. 

இதைப்பற்றிய குறிப்புகள் எனது பார்வையில் .... உங்கள் முன்னால்....

2016 சட்டமற்ற தேர்தல் வாக்கு 73.76 சதவிகிதம் , இதில் சுமார் 40.8 % வாக்குகள் பெற்று , பார்டரில் பாஸ் செய்து மீண்டும் தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது அ.இ.அ.தி.மு.க அரசு.   


          Source: http://eciresults.nic.in/PartyWiseResultS22.htm?st=S22


2011 சட்டமன்ற தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவான தொகுதிகளே பெற்றாலும், தனிப் பெரும்பாண்மை பெற்று மீண்டும் ஆட்சியை பெறுகிறார் ஜெயலலிதா. தமிழக சட்டமற்ற வரலாற்றில் 30 + ஆண்டுகளுக்கு பிறகு , ஆளும்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்த மாபெரும் சாதனை புரிந்தது அதிமுக. எம்.ஜி.ஆர் அவர்களைத் தொடர்ந்து , ஜெயலலிதாவும் இந்த சாதனையை தனதாக்கிக் கொண்டிருக்கிறார். 

1996 தேர்தலுக்கு பிறகு, அதிமுக வும், திமுக வும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலைமை மாறி  இருக்கிறது. 


ஆட்சி மாற்றம் ஏன் சாத்தியப்படவில்லை :

அதிமுக ஆட்சி ஏன் மாற்றப்பட்டிருக்க வேண்டும் ?

  • 2011 - 2016 வரையிலான அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள், 
  • கடும் விலைவாசி உயர்வு.
  • விவசாயிகள் தற்கொலைகள்.
  • எங்கெங்கு காணினும் ஊழலும் , லஞ்சமும். 
  • தகுந்த வேலைவாய்ப்பின்மை.
  • கல்வித்துறை குளறுபடிகள்.
  • பல லட்சம் கோடி கடன்கள்.
  • தொழிற்சாலைகள் மூடப்படுதல்.
  • மின்சார வாரிய ஊழல்கள் மற்றும் கடன்கள்.
  • சென்ற வருட சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்ட  மழை சேதங்கள், அதனால் மக்கள் பட்ட கஷ்டங்கள்,உயிர்/ உடமை இழப்புகள், அதிமுகவினரின் அராஜகங்கள்.
  • சொத்துகுவிப்பு வழக்கில் முதலமைச்சரே சிறை வைக்கப்பட்டது.
  • மெட்ரோ உள்ளிட்ட திட்டங்கள் அனைத்துக்கும் முட்டுக்கட்டைகள்.
  • மது ஒழிப்பு பிரச்சாரம் செய்த மாணவர்கள், நடுநிலையாளர்கள் சிறைவைக்கப்பட்டது.
  • போராட்டம் நடத்திய கண் பார்வையற்றோர் மீதான போலீசார் வன்முறைகள்.
  • தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், உடுமலைபேட்டை சங்கர் என தொடர்ந்து ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்ட,  சாதிய படுகொலைகள்/வன்முறைகள்.
  • கூலிப்படையினரின் கொலை, கொள்ளைகள் என சட்டம் ஒழுங்கு சீர்குலைவு.
  • நேர்மையான அரசு அதிகாரிகள் மிரட்டபடுவது, தற்கொலைக்கு தூண்டப்படுவது. 
  • மணல்,கிரானைட் உள்ளிட்ட கனிமவள சுரண்டல்.           

இன்னும் பல நூறு காரணங்கள் ஆளும் அதிமுக ஆட்சிக்கெதிராக இருந்தும், அதனை ஆட்சியிலிருந்து வீழ்த்த பிரதான கட்சியான திமுகவால் முடியவில்லை. 
இது கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் மிகப் பெரிய பின்னடைவுதான். 


ஏனெனில் முந்தைய திமுக ஆட்சியில் பட்ட அவஸ்தைகளை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கவுமில்லை, முழுதாக மன்னிக்கவுமில்லை. ( பார்க்க http://inaya-tamilan.blogspot.in/2010/12/blog-post_9415.html )

அதே சமயம் இப்போதைய அதிமுகவிற்கு வானளாவிய அதிகாரத்தை தருவதற்கும் மக்கள் தயாராயில்லை , அதன் காரணமாகத்தான், திமுக வுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் க்கும் 98 தொகுதிகளில் பெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள் மக்கள். இது போன்ற வலுவான எதிர்க் கட்சியை தமிழகம் முதல்முறை பெற்றிருக்கிறது. இத்தகைய அறிய வாய்ப்பை திமுக சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.  
" இடித்துரைக்கில்லா ஏமரா மன்னன் " போல  ஆட்சி / காணொளி காட்சி நிகழ்த்தி வந்த அதிமுக விற்கு கடிவாளம் போட, மக்கள் திமுகவிற்கு  அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.  

13 ஆம் முறையாக சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கும் 93 வயது இளைஞர் , கலைஞர் கருணாநிதிக்கும், தனது கடின உழைப்பால் பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக திமுகவை வளர்த்திருக்கும் ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள். 

மாற்றம் எனும் பெரும் ஏமாற்றம் :

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு , அதிமுக , திமுக விற்கு மாற்றாக , அரசியல் மாற்றத்தை முன்னிறுத்தி பல கட்சிகள், கூட்டணிகள் அமைந்த சிறப்பு தேர்தல் இது.   

தேமுதிக - மக்கள் நல கூட்டணி - தமாகா 
பாமக 
பாஜக 
நாம் தமிழர்
இன்னும் பல ...

அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.ஆயினும் மாற்றத்தை முன் மொழிந்த அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தையே  கொடுத்தது இந்த தேர்தல்.

பணநாயகம் :

மக்கள் ஜனநாயகத்தை மறந்து பணநாயகத்திற்கு பணிந்து விட்டனர்.

Democracy  க்கு  புது விளக்கத்தை , தமிழக தேர்தல் கண்டுபிடித்துள்ளது.
" DEMOCRACY is FAR from the People, to BUY the People , and to shut OFF the People

சாதியமும் ( பாமக ), மதவாதமும் ( பாஜக ) , பணநாயகத்தின் (அதிமுக , திமுக ) முன் வீழ்த்தப்பட்டன.

மக்கள் நல கூட்டணி - கேப்டன் நல கூட்டணியாக மாறியதால் தத்தளித்து மூழ்கியது. 
(பண) பசை இல்லாததால் பிசுபிசுத்து போனது மக்கள் நல கூட்டணி.

இந்த தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் என திரையுலக ஹீரோக்கள் தோற்கடிக்கப்பட்டு , காமெடியனான கருணாஸ்  ஹீரோவக்கப்படுள்ளார். 


வாக்கு சதவிதங்கள் :


  • அதிமுக மீண்டும் தனிப்பெரும் கட்சியாக 40.8 %
  • மிக அதிக சக்தியுடன் திமுக 31.6 %
  • திமுக முதுகிலேறி காங்கிரஸ் 6.4 %
  • சுய சாதி பரிசோதனை முயற்சியில் பாமக 5.3 %
  • மோடி எனும் மாயையில் பாஜக 2.8 %
  • 2006 ல் பெரும் நம்பிக்கை கொடுத்த தேமுதிக , வெறும் பத்தே வருடங்களில் (2016) ல் தனது செல்வாக்கை முற்றிலும் இழந்து வெறும் கையாய் நிற்கிறது  2.4 %
  • கம்யூனிஸ்ட் களை விட அதிகம் வாங்கிய சந்தோஷத்தில் நாம் தமிழர்  1.1 %
  • மூழ்கிக்கொண்டிருக்கும் மதிமுக  0.9 %
  • பரிதாப நிலையில் கம்யுனிஸ்டுகள் தலா 0.8 %
  • வீரமாக போர் புரிந்து வெறும் 83 வாக்குகளில், நரித் தந்திரங்களால் தனது  வெற்றியை இழந்த திருமாவின் விசிக 0.8 %





  • வேட்பாளர்கள் மேல் நம்பிக்கை இழந்த NOTA  1.3 %



இனி வரும் அடுத்த 5 வருடங்கள் , மக்களுக்கு ஏதேனும் நல்லது நடக்க எனது பிரார்த்தனைகள்.


நன்றி  !!!


4 Comments
Tweets
Comments

Popular Posts