Find us on Google+ இணையத் தமிழன்: June 2012

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, June 15, 2012

"என் விகடனில்" என் வலைப்பூ !!!


விகடன் படிக்கும் என்னை
என் விகடனில் அறிமுகப்படுத்திய
என் "விகடனுக்கு"
என் நெஞ்சார்ந்த நன்றி.

வெறும் பொழுதுபோக்குக்காக வலைப்பதிவு ஆரம்பித்த நான் ,நீண்ட இடைவெளிகளில்சொற்ப பதிவுகளையே எழுதியுள்ளேன் .வலையுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்த பின் தான் "நான் ஏன் பதிவு எழுத வேண்டும்" என்று தன்னிலை விளக்கத்தை கொடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

வலைப்பூ வட்டத்தில் என் முதல் அங்கீகாரம் / அடையாளம் கொடுத்தது "வலைச்சரம்" . பதிவுலக நண்பர்களுக்கு வலைச்சரத்தை பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும் . அதில் என்னுடைய "சிட்டு குருவிகள் , காணாமல் போன கதை !!!" பதிவை அறிமுகப்படுத்தி எனக்கு முதல் அங்கீகாரத்தை அளித்த வலைச்சர குழுவுக்கு என் நன்றி .


விகடன் எனக்கு எப்போதுமே நெருக்கமானது ."என் விகடன்" ல்  வலையோசை பகுதி ஆரம்பித்ததிலிருந்தே நான் அதை தவறாமல் வாசித்து வருவேன் .ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ,சற்றே பொறாமை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருவேன் .ஆனால் என் விகடனில் என் வலைப்பூவும்  அறிமுகப்படுத்தப்படும் என்று நான் நினைக்கவே இல்லை .






விகடனின் இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் பெரியது .நான் இன்னும் நன்றாக எழுத வேண்டும் , என்னை பாதிக்கும் என் சமூகத்தை பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும் உத்வேகத்தையும் விகடன் எனக்கு அளித்திருக்கிறது . என் வலைப்பூவையும் தேர்ந்தெடுத்த விகடன் நிருபர் "திரு.ஷக்தி" அவர்களுக்கும் , "என் விகடன்" ஆசிரியருக்கும்,என் பதிவை படித்து அதன் நிறை /குறை களை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் என் கோடானுகோடி நன்றி.

Wednesday, June 13, 2012

#நான் தான் சார்லி


மதங்களின் பெயரால் கொல்லப்பட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

ம(னி)தம்

மனிதத்திலிருந்து உன்னை பிரித்தெடுப்பது தம் .

கடவுளை வழிபட,உருவான தம்
கடவுளை விட பெரியதாக , கொடியதாக வளர்வது ஏன் ?

அன்பு,கருணை,இரக்கம் ஆகியவற்றை போதிக்கவேண்டியது தம்,
ஆனால் உலகத்திலுள்ள அனைத்து தங்களின் பெயராலும் 
மனிதர்கள் கொல்லப்படுவது ஏன்?

தத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படும்போது
கடவுளையே கொள்கிறோமே , தெரியவில்லையா?

காட்டு மிருகமாய் இருந்தவனை , சமூக மிருகமாக மற்ற உதவிய தம்,
அவனை மறுபடி காட்டுமிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது என்ன நியாயம்?

என் தம் பெரிது ,உன் தம் பெரிது என்று அடித்துக் கொண்டு சாகிறோமே,
எது பெரிது ? தமா? கடவுளா?





என் தத்தை தவிர , வேறு தத்தவரை அவர் காப்பாற்றமாட்டார் என்றால், அவர் எப்படி கடவுளாக முடியும் ?
அனைத்து மக்களுக்கும்/மாக்களுக்கும் பொதுவானவர் தானே அவர்?

என் கட்சிக்கு மட்டும் தான் சொர்க்கம், எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் நரகம் என்று தீர்ப்பளிக்க ,கடவுள் என்ன அரசியல்வாதியா?

சுற்றுச்சூழல் மாசடைதல், புவி சூடாதல், வணிகமயமாக்கல்,இயற்கை ஆதாரங்கள் அளிக்கப்படுதல் என்று நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் ஆயிரமாயிரம்.

இப்போதுள்ள காலகட்டத்திற்கு, உடனடி தேவை
ரம் வளர்ப்பது தானேயன்றி, தம் வளர்ப்பதல்ல,

உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தவறிவிட்டதால்,
தமும் , தீண்டாமையைப் போல் மனிதத்தன்மையற்றதே !

மனமே கோயில், மனிதமே தெய்வம்.
மதம் தொலைத்து ,மனம் மாறுவோம்..மனிதம் மீட்போம்..

Tuesday, June 5, 2012

"பெட்ரோல் விலையேற்றம்" திரைக்கூத்து விமர்சனம்


ரு வாரங்களுக்கு முன் வெளியாகி ,மக்களிடம் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய கூத்து "பெட்ரோல் விலையேற்றம்". 

  • UPA (உல்டா புல்டா ஆர்ட்ஸ் ) பெருமையுடன் வழங்கும் , 3 ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடு "பெட்ரோல் விலையேற்றம்".
  • கடந்த 5 மாதங்களில் 3 ஆவது முறையாகவும் , கடந்த 8 ஆண்டுகளில் 18 ஆவது முறையாகவும் ரீமேக் ஆகி வெளி வந்துள்ள கூத்து இது.
  • என்னதான் ரீமேக் ஆக இருந்தாலும் , "ரீமேக் தளபதியின்" படங்களைப் போல இல்லாமல் ,வெளியிட்ட அத்தனை இடங்களிலும் சக்கை போடு போட்டு , நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து, வசூலை வாரிக் குவித்திருக்கிறது "பெட்ரோல் விலையேற்றம் ".

தயாரிப்பு : UPA - II  (உல்டா புல்டா ஆர்ட்ஸ் )
இணை தயாரிப்பு : இந்திய /உலக எண்ணெய் நிறுவனங்கள் .
இயக்கம் (பொம்மை ) : MMS  (எ) மண்ணு மோகன சிங்கம் ?
நிஜ இயக்கம் : இடாலியா சோனியா மைனா .

ந்தியாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் Multi Starrer கூத்தான இது , பல பில்லியன் பொருட் செலவில் மெகா பட்ஜெட் திரைக்கூத்தாக வெளிவந்திருக்கிறது .

நடிகர் /நடிகையர் :

மண்ணு மோகன சிங்கம் ,
முமுதா பானர்ஜி
"குழை"ஞர் கருணா
"பய"லலிதா

மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் ..

திரைதுளிகள்: 

  • பெட்ரோல் விலையேற்றம் வெளியாவது தெரிந்த உடனேயே "பெட்ரோலிய துறை" அமைச்சர் வெளிநாட்டிற்கு எஸ்கேப் ஆகிவிட்டார் .
  • வழக்கம் போல மண்ணு மோகன சிங்கம் , இதற்கும் தனது அரசிற்கும் சம்மந்தமே இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தார் .
  • "குழை"ஞர் கருணா , UPA நிறுவனத்திலிருந்து வெளியேறுவேன் என்று வீர வசனம் பேசி மிரட்டுவது போல நடித்து விட்டு , பின்னர் குழைந்து "நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை" என்று பம்மி பதுங்கியது சிறந்த நகைச்சுவை காட்சி .
  • ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அறிவித்த "பய"லலிதா , தனது "புதுக்கோட்டை இடைதேர்தல்" என்னும் திரைக்கூத்தில் பிஸி ஆகிவிட்டதால் போராட்டம் நமநமத்தது.


பாரத் பந்த்: 

UPA வின் பிரதான எதிர் நிறுவனமான "பாரதீய ஜன்னி பார்ட்டி" பெட்ரோல் விலையேற்றத்தை  எதிர்த்து "பாரத் பந்த்" என்னும் திரைக் கூத்தை அவசரமாக வெளியிட்டது . ஆனால் ஒருசில இடங்களைத் தவிர , மற்ற அனைத்து இடங்களிலும் மண்ணை கவ்வியது "பாரத் பந்த்" . 

பாரதீய ஜன்னி பார்ட்டி நிறுவனத்தின் மூத்த தலைவர் திரு.அத்துவானம் அவர்கள் , இது குறித்து மனம் நொந்து தனது வலைப்பூவில் புலம்பியுள்ளார்.

ஆனாலும் இவர்களின் ஒரே மன தைரியத்தை பாராட்டி "கூகுள்" இதனை சிறந்த பொழுதுபோக்கு?! திரைகூத்தாக அறிவித்துள்ளது .






"பெட்ரோல் விலையேற்றம்" வசூல் மழையை வாரிக் குவித்துள்ளதால் , உல்டா புல்டா நிறுவனம் , இதன் தொடர்ச்சியாக விரைவில் "டீசல் விலையேற்றம்" மற்றும் "சமையல் எரிவாயு விலையேற்றம்" ஆகிய கூத்துக்களை வெளியிட்டு மக்களை கதிகலங்க வைக்க தீவிரமாக யோசித்து வருகிறது.

Popular Posts