Find us on Google+ இணையத் தமிழன்: தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, May 18, 2012

தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை


வாசிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டதற்கு, என் அம்மாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து வரும் போது அவர்கள் வாங்கி வரும் வாரஇதழ்களின் பொம்மைகளை பார்க்க , பக்கங்களை திருப்ப ஆரம்பித்ததில் தொடங்கியது என் வாசிப்பு அனுபவம்.

வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்து நான் படித்த சிறுவர்மலர், என்னுள் புதிய உலகத்தை படைக்கத்தொடங்கியது. அதில் வரும் நீதிக் கதைகளும், படக்கதைகளும் எனக்கு ஆச்சர்யத்தை தந்தன.

காமிக்ஸ்:

சித்தி வீட்டில் தான் முதன் முதலில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமாயின
ஜேம்ஸ்பாண்ட்
இரும்புக்கை மாயாவி
முகமூடி வீரர் மாயாவி
ஆர்ச்சி இயந்திர மனிதன்.


ஆகிய காமிக்ஸ் கதாபாத்திரங்களை, முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என வகை தொகை இல்லாமல் மணிக்கணக்கில் படித்து ரசித்தேன்.பள்ளி நூலகத்தில் எனக்கு அறிமுகமானது அம்புலிமாமா கதைகள். விக்கிரமாதித்தன்,தெனாலிராமன் ஆகியோரின் வீர,தீர சாகசங்களை நான் அதில் தான் படித்து தெரிந்து கொண்டேன்.நான் முதன் முதலில் படித்த பெரிய புத்தகம், என் தாத்தா எனக்கு தந்த மகாபாரதம். மிகுந்த ஆர்வத்துடன் , பிரமிப்பையும் தந்தது மகாபாரதம். அதில் பீஷ்மர் என் ஆஸ்தான ஹீரோ. மகாபாரதத்தை தொடர்ந்து ராமாயணத்தையும் படித்து முடித்தேன்.


கிரைம் நாவல்கள்:

பின்னர் எனது ஆர்வம , கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்களை நோக்கி திரும்பிற்று. கிரைம் நாவல் மன்னன ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களை மிகவும் விரும்பி படிப்பேன்.பின்னர்
பட்டுக்கோட்டை பிரபாகர்,
இந்திரா பார்த்தசாரதி,
சுபா
ஆகியோரது திகில் நாவல்களை ரசித்து படித்தேன்.


வ்வாறு வெறும் கிரைம் ,திகில் நாவல்களையே படித்து கொண்டிருந்த நான், படித்த முதல் காதல் நாவல்,இந்துமதி அவர்களின் கீதமடி நான் உனக்கு . அதோடு விடாமல் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் பலவற்றை படிக்க தொடங்கினேன்.


வாரஇதழ்கள்:

டிப்படியாக வார இதழ்கள் பெரும்பாலானவற்றின் வாசகனானேன்.
ஆனந்தவிகடன்
குமுதம்
கோகுலம்
கல்கி
கல்கண்டு
பாக்யா
என அனைத்து பிரபல இதழ்களையும் வாசித்துவிடுவேன்.ஆனந்த விகடன் என்னுள் சிறுக சிறுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 
ஹாய் மதன்,
வந்தார்கள் வென்றார்கள் 
ஆகிய மதனின் தொடர்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

சுஜாதா:

சுஜாதா அவர்களை நான் தெரிந்து கொண்டது விகடன் மூலமாகத்தான்.
அவரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன்? எதற்கு? எப்படி?
மீண்டும் ஜீனோ
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
கற்றதும் பெற்றதும் 


போன்ற அவரின் படைப்புக்கள் என்னை அவரின் பரம விசிறி ஆக்கிவிட்டது

வரலாற்று நாவல்கள் :

ரலாற்று நாவல்களை நான் விரும்பி படிக்க காரணம் சாண்டில்யன் அவர்களின் நாவல்களே.அவர் நாவல்கள் , ஒரு திரைப்படம் பார்ப்பதை போன்ற ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எனக்கு தந்தன. அவற்றுள் சில
கடல் புறா
யவன ராணி
மலையரசி
ஜலதீபம்
ரானா ஹமீர்


கவிதை நூல்கள்:

வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசம் நான் வியந்த கவிதை/கதை நூல்.
அவரின் கள்ளிக்காட்டு இதிகாசமும், தற்போதைய மூன்றாம் உலகப் போரும் கூட எந்தன் விருப்பங்கள்.பார்த்திபன் எழுதிய "கிறுக்கல்கள்" கவிதை நூல் எனக்கு பிடித்தமானது.


பொன்னியின் செல்வன்:

சில வருடங்களாக , தமிழ் நூல்கள்,நாவல்கள் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டது, மீண்டும் நான் தமிழ் நாவல்கள் பக்கம் திரும்ப காரணமாயிருந்தது
கல்கியின் பொன்னியின் செல்வன்.நான் படித்த அனைத்து ஆங்கில நாவல்களையும் தூக்கி சாப்பிடாது போல இருந்தது பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் படைப்புகள் மேல் பன்மடங்கு மதிப்பு உண்டாயின. பொன்னியின் செல்வன் படித்து பல நாட்கள் வந்தியத் தேவனோடும், ஆழ்வார்க்கடியான் நம்பியோடும், ஆதித்த கரிகாலனோடும் குதிரையில் செல்வது போன்ற பிரமை என்னை விட்டு அகலவில்லை. பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவிற்கு கட்டிப்போட்டது.பின்னர் அவரின் சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவையும் படித்து சுவைத்தேன்.




குறிப்பு:
ற்போது நான் படித்துக் கொண்டிருப்பது , தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்தரம் .

நண்பர்களே, நீங்கள் படித்து ரசித்த வேறு சில நாவல்களை , எழுத்தாளர்களை எனக்கும் சொல்லுங்கள் , படித்து மகிழ்வேன் , நன்றி .

2 Comments
Tweets
Comments

Popular Posts