Find us on Google+ இணையத் தமிழன்: June 2016

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Sunday, June 12, 2016

சிவன்மலை - காங்கேயம்



நண்பரின் திருமணத்திற்காக  காங்கேயம் சென்றுருந்தேன். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய ஊர் காங்கேயம்.  சின்ன ஊராக இருந்தாலும் ஓரளவு வளர்ச்சியடைந்த ஊராக இருக்கிறது.
 
காங்கேயம் காளைகள் :

காங்கேயம் என்றாலே அனைவருக்கும் தமிழகத்தின் பாரம்பரிய காளை மாடுகள் ஞாபகம் வரும். இந்தியாவெங்கும் காங்கேயம் காளைகளுக்கு தனி சிறப்பு உண்டு.

சிவன்மலை:

நண்பரின் திருமணம் காங்கேயம் நகருக்கு அருகிலுள்ள சிவன்மலை என்னும் மலைக்கோயிலில் நடைபெற்றது. மலைமேல் உள்ள "அருள்மிகு சுப்பிரமணிய சாமி" திருக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.





சிவமாமலை, சிவாசலம், சிவாத்ரி, சிவசைலம், சிவகிரி, சக்தி சிவமலை என பல பெயர்கள் இதற்கு உண்டு. மலை மேலுள்ள கோவிலுக்கு செல்ல பேருந்துப் பாதையும் உள்ளது. சின்ன மலையாக இருந்தாலும் மிகவும் செங்குத்தாக உள்ளன இதன் படிக்கட்டுகள்.  

சிவன்மலை சுப்பிரமணியர் கோயில் விக்கிபீடியா பக்கம் :



திருப்புகழ், 
சிவமலை புராணம், 
சிவமலை பிள்ளைத்தமிழ், 
சிவமலை மயில்விடுதூது 

போன்ற தமிழ், பக்தி இலக்கியங்கிளில் பாடல் பெற்ற கோவில் இது. 




Popular Posts