Find us on Google+ இணையத் தமிழன்: October 2012

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Sunday, October 28, 2012

WWW - வருங்காலத் தொழில்நுட்பம் - ஆனந்த விகடன் - 2012-10-24




'வருங்காலத் தொழில்நுட்பம்’ புத்தகத்தின் முதல் தொகுதியை அனுப்புவதாக உறுதியளித்த அண்டன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி !

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்
ரண்டு வாரங்களுக்கு முன்னால், கூகுள் மேப் சேவையின் மகத்துவங்களைச் சொன்ன கட்டுரையில், சீனாவில் இருந்து ஜப்பானுக்குச் செல்லும் வழித்தடம்பற்றிய கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தேன். 'பசிபிக் பெருங்கடலில் ஜெட் ஸ்கீயில் (தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டர் போன்ற வாகனம்) 782 கிலோ மீட்டர்கள் செல்லுங்கள்’ என்று கூகுள் செய்யும் குறும்பை எத்தனை பேர் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நோக்கம். கொடுக்கப்பட்ட ஸ்டெப் தவறாக இருந்தாலும், அதைக் கண்டுபிடித்தவர்கள் பலர். அச்சிலோ, ஆன்லைனிலோ சுடச்சுட வெளியானதும் ட்வீட்டிய கண்ணன் (@Kannan Msundaram ), 10-வது நபரான விஜய் பெரியசாமி (@vijay twitts)), 10-வது இடத்தை மயிரிழையில் தவறவிட் டாலும், 'நான்தானே அந்த பத்தாவது ஆள்’ என தொடர்ந்து ட்விட்டரித்த ஸ்ரீஹர்ஷ னுக்கும் (@sri_harshan) 'வருங்காலத் தொழில்நுட்பம்’ புத்தகத்தின் முதல் தொகுதியை அனுப்பி வைக்கிறேன் என அந்த ட்வீட் குருவியின் சாட்சியாக உறுதியளிக்கிறேன்.
 சென்ற வாரத்தில், கடைகளில் பொருட்களைக் கொண்டுவந்து விற்கும் brick & mortar நிறுவனம் ஒன்று அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்குப் போட்டியாக அறிவித்திருக்கும் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம் எனச் சொல்லிஇருந்தேன். அந்தக் கட்டுரை எழுதப்பட்ட பின்னர், இன்னும் இரண்டு நிறுவனங்கள் இதே பாணியில் திட்டங்களை வெளியிட்டுள்ளன. டார்கெட், வால்மார்ட், பெஸ்ட் பை ஆகிய பிரபல நிறுவனங்கள்தான் இவை.
டார்கெட் என்ன செய்கிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடைக்குள் நுழைகிறீர்கள். தேவைப்பட்ட பொருளை (உதாரணத்துக்கு டி-ஷர்ட் என வைத்துக்கொள்ளலாம்) வாங்கி வரலாம். ஒருவேளை உங்களுக்குப் பிடித்த நிறம் கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது குறிப்பிட்ட டி-ஷர்ட் ஸ்டாக்கிலேயே இல்லை என்றாலோ, கவலை ஒன்றும் இல்லை. அது வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் அந்தப் பொருளுக்கு உரிய QR குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கும். உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் அலைமென்பொருளைப் பயன்படுத்தி அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்துகொண்டால் போதும்; உங்களது வீட்டுக்கு அதை அனுப்பிவைத்துவிடுவார்கள். உங்களது பெயர், முகவரி, கடன் அட்டை விவரங்களை ஒரு முறை மட்டும் பதிவுசெய்துகொண்டால் போதும். கடைக் குச் சென்று பொருட்களை வாங்கி சுமந்து வர சோம்பல்கொள்பவர்கள், கடைகளைக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று அலைபேசிகளில் ஸ்கேன் செய்வதை டார்கெட் கடைகளில் விரைவில் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
டார்கெட் கடைகளில் மேற்கண்ட விதத்தில் நீங்கள் வாங்கும்போது, உங்களது பொருட்கள் அவர்களது ஆன்லைன் வணிகப் பிரிவில் இருந்து அனுப்பிவைக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.
வால்மார்ட் ஒரு படி மேலே சென்று விட்டது. கிட்டத்தட்ட டார்கெட் போலவேதான் நுகர்வு அனுபவம் இருக்கப்போகிறதாம். ஆனால், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து டெலிவரி செய்யப்போவது, நீங்கள் ஆர்டர் செய்த அதே கடையாகவே இருக்கும் என்கிறது அவர்களது திட்டம். இதன் மூலம் வாடிக்கையாளர்களோடு மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது அவர்களது எண்ணம். இந்தியாவில் இருந்து மகள் பிரசவத்துக்காக கலிஃ«பார்னியா வருகை தரும் மடக்கிவிட்ட முழுக்கை சட்டை அணிந்த மாமா, சேலை அணிந்த மாமி தம்பதியினர் மாலை வேளையில் காலாற நடந்து வால்மார்ட் சென்று வெண்டைக்காய் ஆர்டர் செய்துவிட்டால், வாக்கிங் முடிந்து வீடு வருகையில் காய்கறி காத்திருக்கும்.
வெயிட்! கலிஃபோர்னியா என்ன... மத்திய அரசின் திட்டப்படி இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் இருக்கும் வால்மார்ட்களில் மேற்கண்டவை நடக்கச் சாத்தியக்கூறுகள் உண்டு.
கடைசியாக, பெஸ்ட் பை நிறுவனம். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விற்கும் இந்த நிறுவனத்துக்குப் பெரும் பிரச்னை தங்களது கடைகளுக்கு வருகை தரும் பதின்ம வயது நுகர்வோர்கள். கடையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து, ஆன்லைன் வணிக வலைதளங்களில் விலை ஒப்பீடு செய்து அவற்றில் நேரடியாக வாங்கிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. கடைக்கு வரும் 40 சதவிகித நுகர்வோர்களே பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள் என்கிறது அவர்கள் திரட்டிய புள்ளிவிவரம். இதை எதிர்கொள்ள அவர்கள் இந்த வருட டிசம்பரில் ஆன்லைன் விலையை ஆதாரத்துடன் காட்டினால், அதே விலைக்குத் தாங்களும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வருடக் கடைசியில் வரும் விடுமுறைகளின்போது நடக்கும் மிகப் பெரிய வணிகத்தை மனதில்கொண்டுதான் இந்த நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆன்லைன் வணிகங்களுடன் போட்டியிட முயற்சி செய்கின்றன. இந்தத் திட்டங்கள் எல்லாம் பயனுள்ளதாக, லாபகரமானதாக இருந்ததா என்பது அடுத்த வருடத் தொடக்கத்தில் தெரிந்துவிடும்.
LOG OFF

Friday, October 12, 2012

கொடைக்கானல் நிழற்பட சிற்றுலா


கொடைக்கானல் :

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் , பல அறிய சிறப்புகளை பெற்றது .

பூவகைகளில் அறிதானதான குறிஞ்சிப்பூ இங்கு காணக்கிடைப்பது சிறப்பு .அதன் பெயராலேயே இங்குள்ள முருகர் கோயில் , குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது .

ஏறத்தாழ 215 விதமான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு பறவையினங்கள் அழயும் நிலையில் உள்ளன. 7 வகையான பறவை இனங்கள் உலகில் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.






படகு குழாம்  1

படகு குழாம்  2

படகு குழாம்  3

பிரயன்ட் பூங்கா:

கொடைக்கானல் ஏரியின்  அருகிலேயே உள்ளது பிரயன்ட் பூங்கா , கண்ணுக்கினிய பல வண்ண மலர்களும் , மரங்களும் இங்கு நிறைந்திருக்கின்றன .

பிரயன்ட் பூங்கா 1

பிரயன்ட் பூங்கா 2

பிரயன்ட் பூங்கா 3

பிரயன்ட் பூங்கா 4

பிரயன்ட் பூங்கா 5

பிரயன்ட் பூங்கா 6


கோகர்ஸ் வாக் :





லா சலேத் பேராலயம் :






கொடைக்கானல் ஏரி :



பைன் மரக்காடுகள் :




தொங்கும் பாறை :






டால்பின் மூக்கு :












மதிகெட்டான் சோலை :

                             






பேரிஜம் ஏரி :





தொப்பி தூக்கி பாறை :



மலர் மற்றும் காய்கறி கண்காட்சி :








Popular Posts