Find us on Google+ இணையத் தமிழன்: காணாமல் போன பேனாக்கள்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Monday, November 5, 2012

காணாமல் போன பேனாக்கள்


எழுத்தின் வீரியத்தை விவரிக்க , கீழ்க்கண்ட சொல்லாடல் ஒரு உதாரணம் ...

"கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது"

என் சிறு வயதில் பேனா பிடித்து எழுதுவதும் எனக்கு பெரிய சாதனை தான் .
மழலை வகுப்புகளில் , பென்சிலை மட்டுமே கையாள முடியும் .
பேனாக்கள் எல்லாம் பெரிய வகுப்பிற்கு சென்றால் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் .






நடுநிலை வகுப்புகளில் , நீலம் அல்லது கருப்பு மை ஊற்றி எழுதும் குண்டு பேனா அறிமுகம் . கைக்கும் சரியாக அடங்காமல் , கையெழுத்தும் சரியாக அமையாமல் , கையிலும் சட்டையிலும் மை அப்பிக்கொண்டு ... அப்பொழுதெல்லாம் "HERO" பேனாவின் மீது மையல் .

                       

ஆனால் ஹீரோ பேனாக்களோ , பெரிய வகுப்புகளுக்கு சென்றால் மட்டுமே , பெற்றோர்கள் வாங்கித் தருவார்கள் . எனவே எப்போது பத்தாம் , பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வருவோம் , பெரிய அண்ணாக்களைப்  போல  
ஹீரோ பேனாக்களை பயன்படுத்துவோம் என்ற ஆசை உண்டு .

                     

பள்ளி இறுதியில் படிக்கும் போதோ , கல்லூரி கனவுகள் வந்து தாலாட்டும் , எப்போது கல்லூரிக்கு செல்வோம் , ஒற்றை நோட்டு புத்தகத்தை முதுகில் சொருகிக்  கொண்டு , ஸ்டைல் ஆக விதவிதமான Ball Point பேனாக்களை உபயோகப்படுத்த முடியும் , என்று ஏக்கம் வருவதுண்டு .


                       

பின்னர் கல்லூரியில் பலவித பேனாக்களை பயன்படுத்திய போதும் ,  அதை அனுபவித்து பார்க்க நேரமோ மனமோ , இல்லாமல் போய் விட்டது .







படிப்பை முடித்து , வேலை கிடைத்து , சில வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும் போது , எனக்கும் பேனாவுக்குமான இடைவெளி நீநீண்டிருந்தது















கடைசியாக எப்போது பேனாவை பயன்படுத்தினோம் என்ற நினைவே இல்லை . கடன் அட்டைகளுக்கு கையெழுத்து போடுவதை தவிர வேறெப்போதும் எனக்கு பேனா தேவைப்பட்டிருக்கவில்லை .
வலைப்பூ எழுதுவதற்கு கூட கணினியின் கீபோர்டே போதுமானதாகிவிட்டது .

                             


அனால் இப்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பார்க்கும் போதும் , அவர்கள் பேனா பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தும் போதும் , எதையோ இழந்த ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை .

4 Comments
Tweets
Comments

Popular Posts