Find us on Google+ இணையத் தமிழன்: 2013

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Monday, March 18, 2013

இந்தியத் தமிழனாக....

லங்கையின் போர் குற்றங்களுக்கும், தமிழ் இன படுகொலைகளுக்கும் எதிராக, தமிழக மாணவர்களின் எழுச்சி மிகு போராட்டம் , தமிழகம் முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் கவனிக்கப்படவேண்டியவை ..

இந்த மாணவர்களின் போராட்ட உணர்விற்கு தலை வணங்குகிறேன் . இந்த போராட்டம் எந்த அரசியல் தலைவர்களாலும் தூண்டி விடப்பட்டதல்ல . அடி ஆழத்திலிருந்து வீரிட்டு எழும் ஆற்றாமையின் வெளிப்பாடு . மனசாட்சி உள்ள யாரும் இதை கொச்சை படுத்த வேண்டாம் ..

அதே சமயம், இந்த போராட்டங்கள் முறைப்படுத்தபடாமல், தகுந்த தலைமை இல்லாமல் , செல்வது மாணவர்களின் வருங்காலத்திற்கு ஆபத்தானது . தமிழக அரசோ, காவல்துறையோ இந்த போராட்டத்தை அடக்கவே செய்யுமே ஒழிய , ஊக்குவிக்காது .

இந்திய அரசும் , இந்த போராட்டங்களுக்கு பணியாது . இலங்கை போரை , முன்னின்று நடத்தியது "இந்தியாவே", இது மறுக்க முடியாத உண்மை . இன அழிப்புக்கு துணை போன அமெரிக்கா வோ , நீர்த்துப் போன ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நாடகம் ஆடுகிறது . போரை முன்னின்று நடத்திய இந்திய அரசோ, அதற்க்கு எல்லா வகையிலும் உறுதுணையாய் இருந்த தமிழ் அரசியல் கட்சிகளோ , இதில் அரசியல் ஆதாயம் தேடவே முயல்கின்றது .

இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்தை , கொண்டு வரவேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு இருந்தாலும் , சற்றும் வலுவில்லாத இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை இதை கொண்டு வராது . 

தயவு செய்து மாணவர்கள் இதனை உணர்ந்து , தமிழக அரசியல் கட்சிகளின் வலையில் வீழாமல் இருப்பது முக்கியம் . தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு ஆதரவும் இருக்கப்போவதில்லை என்பதையும் உணர்ந்து, தங்கள் படிப்பையும் , எதிர் காலத்தையும் , கருத்தில் கொண்டு இந்த போராட்டங்களை கைவிட வேண்டும்.  

தமிழக அரசு செய்யவேண்டியது , இந்திய தமிழ்  மீனவர்களுக்கு எதிராக , சர்வாதிகார போக்குடன் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று , இந்திய அரசுக்கு கடுமையாக நிர்பந்திக்க வேண்டும் . இனி எந்த ஒரு இந்திய தமிழ் மீனவனும் , இலங்கை கடற்படையினால் , தாக்கப்படக் கூடாது . இதனை வெகு தீவிரமாக தமிழக அரசு , மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் .

இந்திய அரசு , தமிழ் மீனவர்களுக்கு பாதுகாவலாக , இந்தியக் கடலோர காவல்  படையை , மீனவர்களுடன் அனுப்ப வேண்டும் .

கேரளா மீனவர்களைக் கொன்ற இத்தாலிய வீரர்களை ,நாடு கடத்த உதவிய , இத்தாலிய தூதரிடம் , காட்டும் கடுமையை..., இந்திய மீனவர்களை தாக்கி, கொல்லும் , இலங்கை மீது இந்திய அரசாங்கம் ஏன் கடுமை காட்டவில்லை ??

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றதா ? என்ற கேள்வியை எழுப்ப நான் விரும்பவில்லை ....

இந்தியத் தமிழர்களை காப்பாற்ற தவறினால், இந்திய கூட்டமைப்பு , கேலிக்குரியதாகிவிடும் .




Popular Posts