Find us on Google+ இணையத் தமிழன்: மோட்டார் வாகன காப்பீடு :

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, June 26, 2015

மோட்டார் வாகன காப்பீடு :


சில்லென்ற ஒரு காலைப் பொழுது,தட்ப வெப்பத்தை ரசித்தபடி,இரு சக்கர வாகனத்தில் என் நண்பனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். பெரும்பாலும் காலை வெகு நேரம் கழித்தே தூங்கி எழும் பழக்கம் இருந்ததால் அன்று , காலை சீக்கிரம் எழுந்ததும் மனதில் சந்தோஷ அலைகள். எப்பொழும் சாலையில் சீறிச் செல்லும் நான்,அன்று விடுமுறையாதலால்,பயணத்தை ரசித்தபடி மெதுவாகச் சென்றேன். மாதச் சம்பளம் வாங்கி 2 நாட்களே ஆனதாலும்,கூடுதல் பூரிப்பு . எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்த அந்த சுபயோக சுப தினத்தில்,சாலையில் திடீரென்று, போலீசார் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். என்னையும் நிறுத்தி ஆவணங்களை கேட்டனர் .

ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தேன்,தலைக் கவசமும் அணிந்திருந்தேன்,சரி ஒரு பிரச்சனையும் இல்லை என்ற தைரியத்தில் இறங்கி நின்றேன்.
அப்போது அந்த போலீஸ்காரர் என் வண்டியின் காப்பீட்டு பத்திரத்தை கேட்டார். சுரீரென்று என் மண்டையில் உறைத்தது ,என் வண்டியின் வாகனக் காப்பீட்டை நான் புதிப்பிக்கவில்லை.போலீசாருக்கு ரொம்ப சந்தோசம், வாயெல்லாம் பல்லாக 500 ருபாய் கேட்டார். வேறு வழியில்லாமல் அபராதத்தொகையை கட்டிவிட்டு, வீடு திரும்பி உடனடியாக என்னுடைய வாகன காப்பீட்டை புதுப்பித்தேன்.

வாகன காப்பீடு - ஏன் தேவை ?! :


நம்மில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் , மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்திருப்பினும் அதன் தேவை என்ன , அவசியம் என்ன என்பது நான் உட்பட பலருக்கு தெரிவதில்லை. 

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி , இந்திய சாலைகளில் ஓடும் அனைத்து மோட்டார் வாகனங்களும் கண்டிப்பாக மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.சாலை விபத்து ஏற்படும்போது , நம்மால் மற்றவர்க்கோ , அவர்களின் வாகனங்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது , அதற்கான இழப்பீட்டை நம்மால் முழுவதுமாக ஈடுகட்ட முடியாது , அதற்கு பதில் நமது காப்பீட்டின் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு வழங்கும். 

காப்பீட்டு வகைகள் : 


மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) : 
மூன்றாம் நபருக்கான இழப்பீடு வழங்கும் காப்பீடு இது. மோட்டார் இன்சுரன்சில் கட்டாயமாக மூன்றாம் நபர் காப்பீடு இருக்க வேண்டும்.
 
தனி நபர் காப்பீடு ( Comprehensive Insurance):
தனக்கோ தன்னுடைய வாகனத்திற்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும். இந்த இன்சூரன்சின்  ப்ரீமியம் சற்று அதிகமாக இருக்கும். 





இணையம் வழியாக மோட்டார் இன்சூரன்சை புதிப்பிக்க முடியும். சிறந்த வாகன காப்பீடு எது என்பதை தேர்ந்தெடுக்க, www.policybazaar.com உட்பட பல இலவச இணைய தளங்கள் உதவும்.   அனைவரும் தவறாமல் வாகன காப்பீட்டை புதிப்பிப்போம், பாதுகாப்பாக பயணிப்போம். 

0 Comments
Tweets
Comments

Popular Posts