Find us on Google+ இணையத் தமிழன்: வேளாங்கண்ணி நடைபயணம்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Saturday, May 26, 2012

வேளாங்கண்ணி நடைபயணம்


வேளாங்கண்ணி , மேரி மாதாவின் திருத்தலம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.
ஒவ்வொரு வருடமும் ,ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்,ஆரோக்ய மாதா திருவிழாவின் போது, திருச்செங்கோடு பங்கு ஆலயத்திலிருந்து பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு சென்று வருவது வழக்கம்.
நான் சிறுவனாக இருக்கும் போதிலிருந்து ஒருமுறையேனும் நடைபயணம் போக வேண்டும் என்று மிகுந்த ஆசை.
ஆனால் அதுகைகூட பல வருடங்கள் நான் காத்திருக்க வேண்டிஇருந்தது.

டந்த 2008 ஆம் ஆண்டு ,வேளாங்கண்ணி நடைபயணம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எங்கள் நடைபயணக் குழுவில் எனக்கு யாரையும் அறிமுகம் கிடையாது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும்
குழுவில் இருந்தார்கள்.
ஆரோக்யமாதாவின் அருளோடு மிகுந்த உற்சாகத்துடன்
தொடங்கியது எங்கள் பயணம்.

மொத்தம் 9 நாட்கள் பயணத் திட்டம்.
ஒவ்வொரு நாளும் 35 முதல் 40 கிலோ மீட்டர் பயணிப்பதாகவும்,
நாளின் முடிவில் அந்தந்த ஊரில் இருக்கும் பங்கு ஆலயத்தில் தங்குவதாகவும் முடிவானது.
திருச்செங்கோடு -வேளாங்கண்ணி மொத்த பயண தூரம்
சுமார் 270 கிலோமீட்டர்.

நாள் 1:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
திருச்செங்கோடு
குமாரமங்கலம்
வேலகவுண்டம்பட்டி
நாமக்கல்
பயண தூரம் : சுமார் 37 கிலோ மீட்டர்.

பசுமை காவலர்கள்
                     
யணம் ஆரம்பிக்கும் போது எந்த வித எதிர்ப்பார்ப்பும் என்னிடம் இல்லை.
அனால்முதல் நாளின்முடிவிலேயே எனக்கு தெரிந்து விட்டது,
என் வாழ்க்கையில் நான் அறிந்திராத பல ஆச்சர்யங்களையும்,
அனுபவங்களையும் எனக்கு கற்றுத் தரும் பயணமிது என்று.

நாள் 2:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
நாமக்கல்
நல்லூர்
வளையப்பட்டி
ஏளூர்பட்டி
தொட்டியம்
பயண தூரம் : சுமார் 32 கிலோ மீட்டர்.

தொட்டியம் அருகே 1
               

தொட்டியம் அருகே 2
                       
ண்மையிலேயே என் வாழ்வில் இப்படி ஒரு பயணத்தை நான் அனுபவித்ததில்லை.
செல்போன் தொல்லை இல்லை ,வெளி உலகத் தொடர்புகளில்லை.. இயற்கையும் நானும் மட்டும்.
இயற்கையோடு இணைந்த வாழ்வு எவ்வளவு
மகிழ்ச்சியாகவும், இயல்பானதாகவும் இருக்கின்றது.


நாள் 3:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
தொட்டியம்
மணமேடு
முசிறி
குணசீலம்
நொச்சியம் - திருச்சி - டோல்கேட்
பயண தூரம் : சுமார் 48 கிலோ மீட்டர்.

மணமேடு 
                     

                               

பயணக்களைப்பில் நான்

ங்கள் பயணக் குழுவில்,நண்பர்களை அமைத்துக் கொண்டேன்.
ஒரு சிறுவனைப் போல் என் உள்ளம் குதூகலமாய் இருக்கின்றது.
எவ்வளவு நடந்தும் கால் வலிக்கவேயில்லை,
சோர்வு இருந்தும் அது உள்ளத்தின் மகிழ்ச்சியை குறைக்கவில்லை.

நாள் 4:                         
திருச்சி - டோல்கேட்
கல்லணை
நேமம்
திருக்காட்டுப்பள்ளி
பூண்டி
பயண தூரம் : சுமார் 25 கிலோ மீட்டர்.


நொச்சியம் அருகே பச்சை போர்வை வயல்வெளி
                         

தமிழனின் பெருமை - கரிகாற்பெருவளத்தானின் கல்லணை
                         
செல்லும் வழி எங்கும் பச்சை போர்வை போன்ற வயல்வெளிகள்,
இன்னும் சக மனிதர்களை மதிக்கும் கிராம மனிதர்கள்,
வெள்ளந்தியாய் மனதைகொள்ளை கொள்ளும் சிறுவர் சிறுமியர்,
50 பைசாவுக்கு இட்லியும்,1 ரூபாய்க்கு தோசையும் விற்கும் கண் தெரியாத மூதாட்டி,
என்று பலவித மனிதர்களை , எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த பயணம்.


நாள் 5:
பூண்டியில் ஓய்வு

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம் !

காவிரி ஆற்றங்கரையோரம் ,தஞ்சை மாவட்டம் , திருவையாறு தாலுகாவில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமம் பூண்டி
இங்கு கி.பி 1714 - 1718 ஆம ஆண்டுகளில் இந்த கோயில்அமைக்கப்பட்டது.
இத்தாலிய பாதிரியாரான அருட் திரு கான்ஸ்டன்டின் ஜோசப் அவர்களால் அமைக்கப்பட்டது இந்த கோயில்.
அவர் வேறு யாருமல்ல , தமிழின் மேல் கொண்ட காதலால் தன்
பெயரை "வீரமாமுனிவர்" என மாற்றிக் கொண்டு,

தொன்னூல் விளக்கம்,
கொடுந்தமிழ் இலக்கணம்,
தேம்பாவணி

போன்ற சிறந்த நூல்களை இயற்றி தமிழுக்கு தொண்டாற்றியவர்.

பூண்டி மாதா திருத்தலம் 1
ந்தியாவில் அமலோற்பவ அன்னைக்காக (Our  Lady of  Immaculate Conception ) அமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இங்கு இயேசு கிறிஸ்து அறைந்து கொல்லப்பட்ட திருச்சிலுவையின்
சிறு பகுதி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

பூண்டி மாதா திருத்தலம் 2
                                     
நாள் 6:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
பூண்டி
திருவையாறு
திருப்பழனம்
ஈச்சங்குடி
பயண தூரம் : சுமார் 31 கிலோ மீட்டர்.

                               


திருவையாறு கோவில்
                     

                   
நாள் 7:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
ஈச்சங்குடி
கபிஸ்தலம்
பாபநாசம்
வலங்கைமான்
மஞ்சக்குடி
செம்மங்குடி
பயண தூரம் : சுமார் 47 கிலோ மீட்டர்.


கபிஸ்தலம் அருகே - நவக்ரஹ ஸ்தல வரைபடம்


நாள் 8:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
செம்மங்குடி
பவித்திரமாணிக்கம்
திருவாரூர்
புலிவலம்
சிக்கல்
நாகப்பட்டினம்
பயண தூரம் : சுமார் 42 கிலோ மீட்டர்.



வனத்து அந்தோணியார் ஆலயம், பவித்திரமாணிக்கம்


திருவாரூர் கோபுர தரிசனம்
                                 

திருவாரூர் கோயில் குளம்
                         
நாள் 9:
பயணம் மேற்கொண்ட வழிகள்:
நாகப்பட்டினம்
பரவை
வேளாங்கண்ணி
பயண தூரம் : சுமார் 12 கிலோ மீட்டர்.

ழி நெடுக மாதாவின் பாடல்களை பாடிக்கொண்டும்,
ஜெபித்துக்கொண்டும் சென்றோம்.

நாகை - வேளாங்கண்ணி செல்லும் வழியில்

சுனாமி நினைவகம்

வேளாங்கண்ணி மாதா வரவேற்கிறார்

வேளாங்கண்ணி ஆரோக்ய மாதா பேராலயம் :

தூய ஆரோக்ய அன்னைதிருத்தலம் , "கிழக்கின் லூர்து (நகர்)"என்னும்
சிறப்பு பெயர் கொண்டது.
குழந்தை ஏசுவை கையில்ஏந்தியவாறு , அந்தணச்சிறுவனுக்கு மாதா காட்சி அளித்ததாக வரலாறுண்டு.
கடற் புயலில் மாட்டிக்கொண்டு தடுமாறிய போர்த்துக்கீசியர்கள் , மாதாவிடம் வேண்டி தப்பித்து வந்ததாகவும், அந்த நன்றியின் பொருட்டுஇங்குஆலயம் எழுப்பியதாகவும் கூறுவர்.
அனைத்து மதத்தைசேர்ந்த மக்களும்இங்கு வந்து மாதாவை வணங்கி செல்வதை பார்க்கும்போது மனது மகிழ்ச்சியாக இருக்கும்.

னைத்து மதங்களும் வலியுறுத்துவது "அன்பு" மட்டும் தானே !.



வேளாங்கண்ணி மாதா திருத்தலம்

ள்ள அள்ளக் குறையாத அன்பையும்,
வாழ்கையின் மீது நம்பிக்கையும்,
இயற்கையின் மீது காதலும் மேலிட,
மனமேயில்லாமல்முடித்துவிட்டோம் எங்கள் பயணத்தை.

யந்திர கதியான இந்த வாழ்க்கையில், இனி எப்போது இது போன்றதொரு பயணம் அமையுமோ தெரியாது.

து வரை காத்திருத்தலுடன் ....
0 Comments
Tweets
Comments

Popular Posts