பொங்கல் ஞாபகங்கள் :
சிறு வயதிலிருந்தே பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஊர் முழுதும் தோரணம், தெருவெங்கும் விழா மேடைகள்!
ஆடல் பாடல் போட்டி, கபடி, வழுக்கு மரமேறுதல் , உறியடித்தல்
போன்ற சுவாரஸ்யமான போட்டிகள் என்று ஊரே கலகலப்பாக இருக்கும்.
விழாக் குழு நண்பர்களின் "பேரிரைச்சல்" ஒலிபெருக்கியின் தயவால்
தொலைகாட்சியில் எந்த நிகழ்சிகளையும் பார்க்க முடியாது .
ஒரு வாரம் பள்ளி விடுமுறையாதலால் காலையிலிருந்து இரவு வரை
பொங்கல் விழா மேடையருகே தான் எங்கள் விளையாட்டுக் களம்.
பாரபட்சமில்லாமல் எல்லா போட்டிகளிலும் கலந்து (?!) கொண்டு , பரிசுகள்
வாங்க தூங்காமல் நடு இரவு வரை விழித்திருத்தல்,
வாடகைக்கு வாங்கி வந்த ஒலி /ஒளி பெட்டிகள் வைத்து , திரை கட்டி
எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை விடிய விடிய பார்ப்பது.
பொங்கலைப்பற்றி நினைத்தாலே , நெஞ்சம் இனித்திருக்க எத்தனையோ
ஞாபகங்கள் இது போல பல இருக்கும் ..
ஆனால் இப்போதெல்லாம் ? :(
ஹும் மீண்டு (மீண்டும் ) வராதா அந்த அழகிய பொங்கல் விழாக் காலம் ?
எங்க வீட்டுப் பொங்கல் :