தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாயிருப்பது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை நேசிக்கும் அனைவரும் , நேசிக்கும், மதிக்கும் மாபெரும் இயக்குனர் , திரு.பாலச்சந்தர் அவர்கள். தமிழ் சினிமாவின் போக்கை தடம் மாற்றிய சிற்பி . தமிழ் சூழலில் எடுத்துக்காட்டப் படாத கதைக் களங்களை மிக தைரியமாக, நேர்மையாக படைப்பாக்கியவர் .
![]() |
Dir K.Balachander (Thanks Google Images) |
இந்திய சினிமாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், மற்றும் கமலஹாசன் ஆகியோரை பட்டை தீட்டியவர். தமிழ் சினிமாவில் ஒரு பெரும் நட்சத்திர கூட்டத்தையே அறிமுகப் படுத்திய சிறந்த இயக்குனர்.
இவர் 100 க்கும் மேலான படங்களை இயக்கியிருக்கிறார். அதில் எனக்கு பிடித்த சில நல் முத்துக்கள் சில ..
- எதிர் நீச்சல்,
- அவள் ஒரு தொடர்கதை,
- ஏக் துஜே கே லியே ,
- தில்லு முல்லு,
- வறுமையின் நிறம் சிவப்பு,
- உன்னால் முடியும் தம்பி,
- வானமே எல்லை,
- சிந்து பைரவி,
- ஜாதி மல்லி,
- புன்னகை மன்னன்,
- புதுப்புது அர்த்தங்கள்.
காலத்தை வென்று நிற்கும் இவரின் படைப்புகள், கே.பாலச்சந்தர் அவர்களின் பெயரை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிறைத்திருக்கும்.