
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Sunday, November 22, 2015
Sunday, October 11, 2015
வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு
இன்று ஓசூரில், நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினர் இணைத்து வழங்கிய,"வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு " என்னும் தலைப்பிலான முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
தமிழக சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் பண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாணயம் விகடன், சிரத்தை எடுத்து தமிழகத்தின் பல ஊர்களில் இது போன்ற நிகழ்சிகளின் மூலமாக சிறந்த சேவை ஆற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது. முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள sms மூலம் பதிவு செய்தவர்களுக்கு பதிவெண் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அனைவருக்கும் ICICI மியூச்சுவல் பண்ட் சார்பில் பேனா, நோட்பேட், மியூச்சுவல் பண்ட் பற்றிய கையேட்டு புத்தகம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்கள். நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கியது. சுமார் 250 பேர் வரை இதில் கலந்து கொண்டனர். ஓசூர் மட்டுமின்றி , பெங்களூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல ஊர்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது.
மியூச்சுவல் பண்ட் நிபுணர் திரு சொக்கலிங்கம் பழனியப்பன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் 'Product Specialist' திரு பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
சேமிப்பு பற்றிய அடிப்படைகளையும், முதலீட்டின் அவசியத்தையும், வெவேறு முதலீட்டு வழிமுறைகள் , அதில் equity சார்ந்த முதலீடு எவ்வாறு அவசியம் என்பது குறித்து பல்வேறு statistics மூலம் விவரமாக எடுத்துரைத்தார் திரு பாலாஜி. பின்னர் திரு சொக்கலிங்கம் அவர்கள் சேமிப்பின் பின்னாலுள்ள மக்களின் மனநிலையை பற்றி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.
நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள். இது போல இன்னும் பல நிகழ்சிகளை தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நீங்கள் நடத்த வேண்டும், இதன் மூலம் மக்கள் சரியான வழியில், தங்கள் முதலீடுகளை செய்ய முடியும்.
(வெறும் 3 மணி நேரத்தில், சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து போதிய விழிப்புணர்வு கொடுக்க முடியாதிருந்த போதிலும் , இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கது. ஆனால் சாதாரண, நடுத்தர குடும்ப மக்களே பங்கேற்ற இந்த நிகழ்வில் பெரும்பாலும், ஆங்கிலத்திலும் முதலீடுகள் குறித்த Technical Terms இல் மட்டுமே விளக்கம் அளித்தனர். இதனால் மியூச்சுவல் பண்ட் குறித்து ஏற்கனவே அறிந்திராதவர்களுக்கு சற்று கடினமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. எதிர்வரும் நிகழ்வுகளில் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நாணயம் விகடன்-ஐ அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)
Monday, September 14, 2015
EXPLORATION 2015- [FLOWERS] @CARMEL CONVENT
Labels:
Carmel,
Convent,
Exploration,
Flowers
Location:
Bengaluru, Karnataka, India
Wednesday, September 2, 2015
ஆதார் தகவலை புதுப்பிக்க / மாற்றும் வழிமுறை
ஆதார் தகவலை புதுப்பிக்க / மாற்றும் வழிமுறை பற்றிய ஆதார் (UID) நிறுவனத்தின் இ மெயில் :
எவ்வளவு எழுத்துப் பிழைகள்,இலக்கணப் பிழைகள் உள்ளது என பாருங்கள். ஒரு அரசு நிறுவனத்தின் தகவலில் இத்தனை பிழைகள் ஏன் ?
|
Saturday, August 1, 2015
A.P.J. அப்துல் கலாம் : கண்ணீர் அஞ்சலி
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நீங்காது நிலைதிருப்பவர் நீரே !!!
இந்தியாவின் தென்கோடி ராமேஸ்வரத்தில் உதித்த ஏவுகணை ஒன்று
தேசமெங்கும் தனது புகழ் பரப்பி ஷில்லாங்கில் மறைந்தது.
உனைப்பெற்று பேருவகை கொண்டாள் தமிழன்னை, இன்று
உன்னை இழந்து பாரத மாதா, பெருந்துயரம் கொண்டாள்.
எளிமையாய் பிறந்தாய் ,
எளிமையாய் வாழ்ந்தாய் ,
எளிமையாய் எமை விட்டு பிரிந்து சென்றாய் .
எளிமைக்கு இலக்கணம் வகுத்தாய் .
எங்களை கனவு காணச்சொன்ன நீங்கள்
இப்போது எங்களை கண்ணீரில் விட்டுச் சென்றீர்.
மனிதனாய் பிறந்தாய்
முதல் குடிமகனாய் உயர்ந்தாய்
மாமனிதராய் வாழ்ந்தாய்
இன்று புனிதராய் மரித்தீரே!!!
நீ எங்களை விட்டுச் சென்றுவிட்டாய் . ஆம் !!! ,
வளமான , வலிமையான , அமைதியான பாரதத்தை
உண்டாக்கும் பொறுப்பை , இன்றைய தலைமுறையினரிடம்
விட்டுச் சென்றுள்ளாய் .
அப்துல் கலாம் ஐயா , உங்களை ஒருமுறை பார்க்க,
வாய்ப்பு அளித்ததோடு மட்டும் அல்லாமல்
எனக்கு ஆசானாக , எங்கள் கல்லூரியில் நீங்கள் எடுத்த
வகுப்பில் இடம்பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி .
நீங்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை
இந்திய இளைஞர்கள் நெஞ்சில் விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள் !!!
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நீங்காது நிலைதிருப்பவர் நீரே !!!
![]() |
Photo Credits to Pushkar V , from Flickr: https://www.flickr.com/photos/pushkarv/5148146554 |
இந்தியாவின் தென்கோடி ராமேஸ்வரத்தில் உதித்த ஏவுகணை ஒன்று
தேசமெங்கும் தனது புகழ் பரப்பி ஷில்லாங்கில் மறைந்தது.
உனைப்பெற்று பேருவகை கொண்டாள் தமிழன்னை, இன்று
உன்னை இழந்து பாரத மாதா, பெருந்துயரம் கொண்டாள்.
எளிமையாய் பிறந்தாய் ,
எளிமையாய் வாழ்ந்தாய் ,
எளிமையாய் எமை விட்டு பிரிந்து சென்றாய் .
எளிமைக்கு இலக்கணம் வகுத்தாய் .
எங்களை கனவு காணச்சொன்ன நீங்கள்
இப்போது எங்களை கண்ணீரில் விட்டுச் சென்றீர்.
மனிதனாய் பிறந்தாய்
முதல் குடிமகனாய் உயர்ந்தாய்
மாமனிதராய் வாழ்ந்தாய்
இன்று புனிதராய் மரித்தீரே!!!
நீ எங்களை விட்டுச் சென்றுவிட்டாய் . ஆம் !!! ,
வளமான , வலிமையான , அமைதியான பாரதத்தை
உண்டாக்கும் பொறுப்பை , இன்றைய தலைமுறையினரிடம்
விட்டுச் சென்றுள்ளாய் .
அப்துல் கலாம் ஐயா , உங்களை ஒருமுறை பார்க்க,
வாய்ப்பு அளித்ததோடு மட்டும் அல்லாமல்
எனக்கு ஆசானாக , எங்கள் கல்லூரியில் நீங்கள் எடுத்த
வகுப்பில் இடம்பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி .
நீங்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை
இந்திய இளைஞர்கள் நெஞ்சில் விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள் !!!
Thursday, July 2, 2015
Friday, June 26, 2015
மோட்டார் வாகன காப்பீடு :
சில்லென்ற ஒரு காலைப் பொழுது,தட்ப வெப்பத்தை ரசித்தபடி,இரு சக்கர வாகனத்தில் என் நண்பனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். பெரும்பாலும் காலை வெகு நேரம் கழித்தே தூங்கி எழும் பழக்கம் இருந்ததால் அன்று , காலை சீக்கிரம் எழுந்ததும் மனதில் சந்தோஷ அலைகள். எப்பொழும் சாலையில் சீறிச் செல்லும் நான்,அன்று விடுமுறையாதலால்,பயணத்தை ரசித்தபடி மெதுவாகச் சென்றேன். மாதச் சம்பளம் வாங்கி 2 நாட்களே ஆனதாலும்,கூடுதல் பூரிப்பு . எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்த அந்த சுபயோக சுப தினத்தில்,சாலையில் திடீரென்று, போலீசார் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். என்னையும் நிறுத்தி ஆவணங்களை கேட்டனர் .
ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தேன்,தலைக் கவசமும் அணிந்திருந்தேன்,சரி ஒரு பிரச்சனையும் இல்லை என்ற தைரியத்தில் இறங்கி நின்றேன்.
அப்போது அந்த போலீஸ்காரர் என் வண்டியின் காப்பீட்டு பத்திரத்தை கேட்டார். சுரீரென்று என் மண்டையில் உறைத்தது ,என் வண்டியின் வாகனக் காப்பீட்டை நான் புதிப்பிக்கவில்லை.போலீசாருக்கு ரொம்ப சந்தோசம், வாயெல்லாம் பல்லாக 500 ருபாய் கேட்டார். வேறு வழியில்லாமல் அபராதத்தொகையை கட்டிவிட்டு, வீடு திரும்பி உடனடியாக என்னுடைய வாகன காப்பீட்டை புதுப்பித்தேன்.
வாகன காப்பீடு - ஏன் தேவை ?! :
நம்மில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் , மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்திருப்பினும் அதன் தேவை என்ன , அவசியம் என்ன என்பது நான் உட்பட பலருக்கு தெரிவதில்லை.
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி , இந்திய சாலைகளில் ஓடும் அனைத்து மோட்டார் வாகனங்களும் கண்டிப்பாக மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.சாலை விபத்து ஏற்படும்போது , நம்மால் மற்றவர்க்கோ , அவர்களின் வாகனங்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது , அதற்கான இழப்பீட்டை நம்மால் முழுவதுமாக ஈடுகட்ட முடியாது , அதற்கு பதில் நமது காப்பீட்டின் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு வழங்கும்.
காப்பீட்டு வகைகள் :
மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) :
மூன்றாம் நபருக்கான இழப்பீடு வழங்கும் காப்பீடு இது. மோட்டார் இன்சுரன்சில் கட்டாயமாக மூன்றாம் நபர் காப்பீடு இருக்க வேண்டும்.
தனி நபர் காப்பீடு ( Comprehensive Insurance):
தனக்கோ தன்னுடைய வாகனத்திற்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும். இந்த இன்சூரன்சின் ப்ரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
இணையம் வழியாக மோட்டார் இன்சூரன்சை புதிப்பிக்க முடியும். சிறந்த வாகன காப்பீடு எது என்பதை தேர்ந்தெடுக்க, www.policybazaar.com உட்பட பல இலவச இணைய தளங்கள் உதவும். அனைவரும் தவறாமல் வாகன காப்பீட்டை புதிப்பிப்போம், பாதுகாப்பாக பயணிப்போம்.
Saturday, February 7, 2015
இந்திய அஞ்சல் துறை
உலகின் மிகப் பரந்த தபால் சேவை:
உலகிலேயே மிகப் பரந்த சேவையளிக்கும் தபால் துறை , இந்தியாவின் அஞ்சல் துறையாகும். இத்தகைய பெருமை மிகு அஞ்சல் துறையின் தற்போதைய நிலைமை என்ன ? ஒன்றரை லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அஞ்சலகங்கள் , நான்கரை லட்சத்திற்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் என இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் கடைக் கோடி கிராமங்களையும் இணைக்கும் அற்புதமான இணையம் இந்த அஞ்சல் துறை. வங்கிகளைப் போல, அஞ்சல் துறையில் வேலை கிடைப்பதும், வேலை பார்ப்பதும் கௌரவமாக நினைக்கப் பட்ட காலம் ஒன்று உண்டு.
![]() |
Photo Credits to : Fabien David @ Flickr https://www.flickr.com/photos/moneyticketspassport/6974944070 |
அஞ்சல் துறையின் "முகவரி சான்று" சேவை :
பல வகைப்பட்ட சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் , மக்களால் அதிகம் அறியப்படாத சேவை இந்த "முகவரி சான்று" சேவை. வேலை நிமித்தமாக பல ஊர்கள், மாநிலங்கள் மாறி வேலை பார்க்க வேண்டியிருப்பதால் பல காரணங்களுக்காக "முகவரி சான்றிதழ்" தேவைப்படுகிறது . ஆனால் அதற்காக பலவாறு சிரமப்படவேண்டியிருக்கிறது. இத்தகைய மக்களுக்காக அஞ்சல் துறை ஒரு அருமையான திட்டத்தை கொண்டுவந்தது .
அஞ்சலகத்தில் உள்ள "முகவரி சான்று" விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தபின், அஞ்சலக ஊழியர் ஒருவர் கொடுக்கப்பட்ட முகவரியை நேரடியாக சென்று சரி பார்த்து பின்னர் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை/ முகவரி அட்டையை தருவார்கள். இதைக் கொண்டு சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு என பல சேவைகளை பெற முடியும் .
புதிய சிந்தனை இல்லாமை / அலட்சிய போக்கு :
கால ஓட்டத்தோடு தனது சேவைகளை மேம்படுதிக்கொள்ளாமல், அஞ்சலக பிரிவான "தந்தி" சேவை தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டது ஒரு உதாரணம் தான். விரைவான சேவை , வாடிக்கையாளர் எப்போதும் அணுகக் கூடிய எளிமை ஆகிய காரணங்களால் தனியார் அஞ்சல் (எ) கூரியர் நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்து , வெற்றியும்பெற்றன.இன்று பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் , தொழில் முறை கடிதங்கள் மட்டுமே அரசின் அஞ்சல் துறையை பயன்படுத்துகின்றன. மக்கள் தங்களை புறக்கணித்து தனியார் சேவையை ஏன் தேடுகின்றனர் என்பதை கொஞ்சமும் பொருட்படுதிக்கொல்லாத, அலட்சியப் போக்கே இப்போதைய அஞ்சலகங்களிலும் , அஞ்சல் அலுவலர்களிடமும் காண முடிகின்றது. இத்தகைய ஒரு நல்ல திட்டத்தை மக்களிடையே சரிவர விளம்பரப் படுத்தாமல் விட்டதால் , பெரும்பாலும் இதைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை.
எனது அனுபவம் :
இணையத்தின் வழியாக இந்த சேவையை அறிந்து , இதனை பெறுவதற்காக அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகினேன். அலுவலகம் எந்த பரபரப்பும் இல்லாமல் காலியாக இருந்தது. ஊழியர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். இந்த சேவைக் காண விண்ணப்பத்தை நான் கேட்டவுடன், ஏதோ புரியாத ஒன்றை கேட்டது போல ஒரு பார்வை பார்த்தார் அந்த ஊழியர். பின்பு அவர் கூறியது தான் அதிர்ச்சி..
"முகவரி சான்று" கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கு இன்னும் அந்த சான்று கிடைக்கவில்லை. குறைந்தது ஒரு வருடம் ஆகலாம், வராமலும் போகலாம். எனவே நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். வேறு ஏதாவது வழி இருந்தால் அதை முயற்சி செய்யுங்கள் என்று "கூசாமல்" கூறிவிட்டு,திரும்பிக் கொண்டார் .
அஞ்சலகத்தின் சேவை ஒன்றைப் பற்றி அதன் ஊழியரே இவ்வளவு மட்டமான கருத்து வைத்திருந்தால் , பொது மக்களுக்கு இந்த துறையின் மீதும், அதன் ஊழியர் மீதும் என்ன நம்பிக்கை இருக்கும் ? என்ன மதிப்பு இருக்கும் ? ஊழியர்களின் இத்தகைய மனப்பாங்கினால், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த துறை எவ்வாறு லாபத்தை கொடுக்கும்? என்ன தான் அரசு திட்டங்கள் தீட்டினாலும், சேவைகளை அறிமுகப் படுத்தினாலும், இத்தகைய ஊழியர்களால் அது சரியான மக்களைச் சென்று சேர்வதேயில்லை.
உலகமயமாக்கலின், தனியார்மயமாக்கலின் பெரும் சுழற்காற்றில் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா ?
அரசும் அதன் ஊழியர்களும் விழித்தால் நலம் !
Labels:
அஞ்சல் துறை,
இந்தியா,
கூரியர்,
தந்தி,
தபால் துறை,
தனியார் அஞ்சல்
Location:
Bengaluru, Karnataka, India
Friday, January 30, 2015
JOURNEY BY WALK : A PHOTO JOURNEY TO VELANKANNI
Labels:
Basilica,
Kallanai,
Karikalan,
Poondi,
Shrine,
Thiruvaiyaru,
Tiruvarur,
Velankanni
Location:
Velankanni, Tamil Nadu 611111, India
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ப யணங்கள் எப்போதுமே இனிமையானது!!! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்...
-
சமுதாயத்தின் மேல் அக்கறைப்படும் / கோபப்படும் அத்துனை நல் உள்ளங்களுக்கும்.... தனி மனித ஒழுக்கமின்றி , சமுதாய சீர்திருத்தம் என்றுமே சா...
-
அனைவருக்கும் இனிய பொங்கல் (தமிழ் புத்தாண்டு ?) நல் வாழ்த்துக்கள் . பொங்கல் - தமிழ் புத்தாண்டா? இந்த அரசியல்வாதிகள் , மக்களை ரொ...
-
பொங்கல் ஞாபகங்கள் : சிறு வயதிலிருந்தே பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஊர் முழுதும் தோரணம், தெருவெங்கும் விழா மேடைகள்! ஆடல் ப...
-
நண்பரின் திருமணத்திற்காக காங்கேயம் சென்றுருந்தேன். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய ஊர் காங்கேயம். சின்ன ஊராக இருந்தாலும் ஓரள...
-
தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாயிருப்பது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை நேசிக்கும் அனைவரும் , நேசிக்கும், மதிக்கும் மாபெரும் இயக்குனர் ,...
-
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 6 மணி ஆனவுடனே உங...
-
கடந்த 3 மாதங்களாக தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த , 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு வழியாக முடிந்து , இன்று முடிவுகளும் வெளியாகி...