Find us on Google+ இணையத் தமிழன்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, April 6, 2012

சிவசமுத்திரம் அருவி : ஒரு பயணக் கட்டுரை




பயணங்கள் எப்போதுமே இனிமையானது!!! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி !!!


நண்பன் ரங்கா , சென்னையில் வேறு ஒரு ஒரு நிறுவனத்திற்கு மாறுதலாகி செல்வதால் , அதற்கு முன் நண்பர்களோடு ஒரு சிற்றுலா செல்ல திட்டமிட்டோம் . முதலில் நந்தி மலைக்கு Bike Ride செல்வதாக திட்டமிட்டு , கடைசி நேரத்தில் சிவசமுத்திரம் அருவிக்கு செல்வதாக முடிவெடுத்தோம் .

சிவசமுத்திரம் அருவி - ஒரு முன்னோட்டம் :
  • சிவசமுத்திரா (அ) சிவனசமுத்திரா , கர்நாடக மாநிலத்தின் , சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது.பெங்களுரு விலிருந்து 139 கி.மீ தூரத்தில் இருக்கிறது .
  • சிவசமுத்திரம் அருவி , இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவி மற்றும் உலகின் பதினாறாவது பெரிய அருவி .
  • காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த அருவி,வீழும் இடத்தில் இரண்டாகப்பிரிந்து ககனசுக்கி, பரசுக்கி என இரு அருவியாக வீழ்கிறது.


எங்கள் பயணம் :

மழை ஆரம்பித்து வைத்த ஒரு சனிக்கிழமை அதிகாலை , எங்கள் பயணம் இனிதே ஆரம்பமானது .12 பேர் கொண்டது எங்கள் குழு . அதிகாலை 6 மணிக்கு , புறப்படுவதற்கு தயாரானோம் , ஆனால் வேன் வர தாமதமானதால் , 7 மணியளவில் கிளம்பினோம் .

                          


8.30 மணிக்கு , பெங்களுரு புறநகர் பகுதியை தாண்டியிருந்தோம் . "Wonder La" வுக்கு அருகிலுள்ள ஒரு சாலையோர உணவகத்தில் , காலை உணவை உண்டோம் .பெரிய சைஸ் "தட்டு" இட்லி , சுமார் தான் , ஆனாலும் புதுமை ...

செல்லும் வழியில் , கில்மா சாமிகள் "நித்தியானந்தா" புகழ்?! "பிடதி" நகரம்,
இந்தியாவின் மிகப்பெரிய பட்டு சந்தைகளில் ஒன்றான  "ராமநகரா" (பட்டு நகரம் என அழைக்கப்படுகின்றது ),
மற்றும் மரப்பாச்சி பொம்மைகளுக்கு பெயர் பெற்ற "சன்னபட்டனா " (Land Of Toys என அழைக்கப்படுகின்றது ) என்னும் சிறு நகரம் , ஆகிய ஊர்களின் வழியாக , எங்கள் வேன் சென்றது .

பாட்டும் , கூத்துமாக உற்சாகமாக பயணமானோம். 11 மணியளவில் சிவசமுத்திரா நகருக்கு அருகிலுள்ள ஆசியாவின் முதல் நீர்-மின் நிலையத்தை ( 1902 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது )அடைந்தோம்.
சிறிது நேர photo shoot ற்கு பிறகு , மீண்டும் தொடர்ந்தோம் .

                        

"கள்" எங்கு கிடைக்கும் என்று அடிக்கடி விசாரித்துக்கொண்டிருந்த நண்பன் ராமின் , எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற படி எங்கள் வேனின் டிரைவர் , ஒரு சிறிய கிராமத்தில் "கள்"  கிடைக்கும் ஒரு வீட்டிற்கு எங்களை கூட்டி சென்றார். அங்கே தாகத்திற்கு தென்னை பதநீர் அருந்திய பின்னர் , அருவியை நோக்கி விரைந்தது எங்கள் வேன் .


                         



                         

Monday, November 7, 2011

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?




அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...


முகபுத்தகத்தில் பார்த்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் ....

Popular Posts